கடவுள்?.....ஊஹூம்!: தற்சார்பற்ற சுயசிந்தனைப் பதிவுகள் (Tamil Edition) por 'பசி'பரமசிவம்

October 18, 2019

கடவுள்?.....ஊஹூம்!: தற்சார்பற்ற சுயசிந்தனைப் பதிவுகள் (Tamil Edition) por 'பசி'பரமசிவம்

Titulo del libro: கடவுள்?.....ஊஹூம்!: தற்சார்பற்ற சுயசிந்தனைப் பதிவுகள் (Tamil Edition)

Autor: 'பசி'பரமசிவம்

Número de páginas: 46 páginas

Fecha de lanzamiento: December 20, 2018

கடவுள்?.....ஊஹூம்!: தற்சார்பற்ற சுயசிந்தனைப் பதிவுகள் (Tamil Edition) de 'பசி'பரமசிவம் está disponible para descargar en formato PDF y EPUB. Aquí puedes acceder a millones de libros. Todos los libros disponibles para leer en línea y descargar sin necesidad de pagar más.

'பசி'பரமசிவம் con கடவுள்?.....ஊஹூம்!: தற்சார்பற்ற சுயசிந்தனைப் பதிவுகள் (Tamil Edition)

ஏன் இந்த நுண்ணாய்வு?
அனைத்து உலகங்களையும் கோடி கோடி கோடானுகோடியோ கோடி உயிர்களையும் படைத்தவர் கடவுள் என்கிறார்கள்.
எனவே, ஆறறிவு ஜீவன்களாகிய நம்மைப் படைத்தவரும் அவரே.
நாம் வேண்டிக்கொண்டதால் கடவுள் நம்மைத் தோற்றுவிக்கவில்லை. அதாவது, நம் சம்மதம் இல்லாமலே இவ்வுலகில் பிறந்து இன்பதுன்பங்களை அனுபவிக்கச் சபித்திருக்கிறார் என்று நான் சொன்னால் அதை மறுத்துரைப்பது எளிதல்ல.
அவர் படைத்துவிட்டார்.
வேறு வழியின்றி நாம் வாழ்கிறோம்[அடிமனதில் அழுத்தமாய்ப் பதிவு செய்யுங்கள்]. வயது முதிர்ந்த நிலையிலோ அதற்கு முன்னதாகவோ நாம் செத்தொழிவது 100% உறுதி. மகான்கள், ஞானிகள், அவதாரங்கள் என்று இதற்கு விதிவிலக்கானவர் எவருமில்லை.
சாவு நம்மைத் தேடி வரும்வரை காத்திருக்கிறோம். இடைப்பட்ட காலத்தில் அதைத் தேடிப் போக நம்மில்[மனநிலை பாதிக்கப்பட்டோர் தவிர] எவரும் தயாராக இல்லை.
ஆசை..., ‘இன்னும் வாழ வேண்டும்’ என்னும் பேராசையே காரணம். ஆசைப்பட வைத்தவரும் அந்தக் கடவுளே!
இந்த ஆசை காரணமாக, சாவை நினைத்து அஞ்சுகிறோம்; மனம் கலங்குகிறோம்; மரணமில்லாப் பெருவாழ்வை எண்ணி நாளும் ஏங்குகிறோம். ஆனாலும், மரணம் நம்மை விட்டு வைப்பதில்லை; ஓட ஓட விரட்டி ஒரு நாள் ‘காவு’ கொள்ளத் தவறுவதே இல்லை.
இந்தச் சாவுக்கான காரணக் கர்த்தா யார்?
நம்மவர் நாள்தோறும் போற்றித் துதிபாடுகிற கடவுள்தானே?
நம் சம்மதம் இல்லாமலே நம்மைப் பிறப்பித்த கருணை வடிவான கடவுள், நம் சம்மதம் இல்லாமலே சாகடிக்கவும் செய்கிறார். சாவதற்குள் அடுக்கடுக்கான துன்பங்களின் தாக்குதல்கள் வேறு.
இந்தக் கடவுளைத்தான் ஆதியும் அந்தமும் இல்லாதவர்; அணு முதல் அண்டம் வரை அனைத்தையும் ஆள்பவர்; அருள் வடிவானவர் என்று போற்றிப் புகழ்ந்து வழிபடுகிறது உலகம்.
கடவுளை வழிபடுவதால் பயன் உண்டா? அப்படி ஒருவர் இருக்கிறாரா? ஆழ்ந்து சிந்தித்ததன் விளைவு இந்நூல்.